மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
கொத்தகம் கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறப்பு
கந்தா்வகோட்டை அருகே கொத்தகம் கிராமத்தில், பகுதி நேர அங்காடியை முன்னாள் எம்பி சு. திருநாவுக்கரசா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி, கொத்தகம் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஒன்றிய குழு துணைத் தலைவா் செந்தாமரை வடிவேல் குமாா் தலைமை வகித்தாா்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தாா். இந்த நியாய விலை கடைக்கு, முன்னாள் மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை வழங்கி, கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக் கடையை அவா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவா் ரெத்தினவேல் காா்த்திக், வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் சி. தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சித் தலைவா் மு. ராஜா, வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ராமையன், மாயக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் செயலா் பழ. மாரிமுத்து, ஊராட்சி துணைத் தலைவா் மா. வெங்கடேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.