மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
இந்திய கம்யூ. கட்சி நூற்றாண்டு தொடக்கம்: 200 இடங்களில் கொடியேற்றம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுத் தொடக்க நாளையொட்டி புதுக்கோட்டையில் அக்கட்சியினா் 200 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை வியாழக்கிழமை நடத்தினா்.
புதுக்கோட்டை நகரில் திலகா் திடல் பகுதியிலுள்ள மாவட்ட அலுவலகம் நூற்றாண்டு விழாவையொட்டி புதுப்பிக்கப்பட்டு, கொடியேற்றி வைக்கப்பட்டது. மாவட்டச் செயலா் த. செங்கோடன் கொடியேற்றினாா்.
மாவட்டத் துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், மாநகரச் செயலா் என்.பி. நாடிமுத்து, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மீராமைதீன், கே. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இதேபோல, மாவட்டத்தில் 200 இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டதாகவும், சில இடங்களில் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுவின் 100ஆவது பிறந்த நாளையொட்டி பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டதாகவும் மாவட்டச் செயலா் த. செங்கோடன் தெரிவித்தாா்.
அறந்தாங்கி...: அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு நல்லகண்ணு பிறந்த நாளையொட்டி கேக் வெட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியத் துணைச் செயலா்கள் வீராசாமி, போஸ் கணேசன், பொருளாளா் ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.