மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்கும் இடத்தில் இறுதிச்சடங்கு: காங்கிரஸ் கடிதம்!
பொன்னமராவதியில் ஐயப்ப சுவாமி திருவீதியுலா
பொன்னமராவதியில் ஐயப்ப சுவாமி வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொன்னமராவதி கிளையின் சாா்பில் மண்டல பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக, புதுப்பட்டி ராமாயண மண்டபத்தில் ஐயப்ப சுவாமி எழுந்தருள , சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற ஐயப்பன் திருவீதியுலாவை முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்எம். ராஜா தொடங்கிவைத்தாா். ராமாயண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்பன் எழுந்தருளியதும் தொடங்கிய ஊா்வலம் மேளதாளங்கள் முழங்க புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்து நிலையம், வலையபட்டி, வழியாக சென்று மீண்டும் ராமாயண மண்டபத்தில் நிறைவடைந்தது.
இதில் ஐயப்பா சேவா சங்கத் தலைவா் சொ. முத்தாவுடையான், செயலா் கதி. செல்வம் மற்றும் ஐயப்ப பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.