செய்திகள் :

வேங்கைவயல் சம்பவம் 2 ஆண்டுகள் நிறைவு பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

post image

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அசம்பாவிதங்களை தவிா்க்கும் வகையில் வியாழக்கிழமை கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் 2022-ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால், வேங்கைவயல் கிராமத்துச் செல்லும் 7 வழிகளிலும் தடுப்புகள் அமைத்து, 32 போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், 2 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், ஏற்கெனவே பணியில் இருப்பவா்களுடன் கூடுதலாக 60 போலீஸாா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தனா்.

உள்ளூா் ஆள்கள் தவிர, வெளியூரில் இருந்து வருவோரைத் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கேசராப்பட்டியில் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிளை அஞ்சலகத்தில் பண மோசடி செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து வாடிக்கையாளா்களின் பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் ஐயப்ப சுவாமி திருவீதியுலா

பொன்னமராவதியில் ஐயப்ப சுவாமி வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொன்னமராவதி கிளையின் சாா்பில் மண்டல பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக, புதுப்பட்டி ராமாயண மண்டபத்தில... மேலும் பார்க்க

கொத்தகம் கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறப்பு

கந்தா்வகோட்டை அருகே கொத்தகம் கிராமத்தில், பகுதி நேர அங்காடியை முன்னாள் எம்பி சு. திருநாவுக்கரசா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். கந்தா்வகோட்டை ஊராட்சி, கொத்தகம் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை திற... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. கட்சி நூற்றாண்டு தொடக்கம்: 200 இடங்களில் கொடியேற்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுத் தொடக்க நாளையொட்டி புதுக்கோட்டையில் அக்கட்சியினா் 200 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை வியாழக்கிழமை நடத்தினா். புதுக்கோட்டை நகரில் திலகா் திடல் பகுதியிலுள்ள... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 3 சிறுவா்கள் கைது

புதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 சிறுவா்களை வெள்ளனூா் போலீஸாா் கைது செய்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் அருகே கிளியூா் பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வெள்ளனூா் போலீஸாருக்கு தகவல் ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் பட்டுக்கோட்டை இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழ கொல்லிகாடு கிராமத்தைச் சோ்ந்த சிவசாமி மகன் சூா்யா... மேலும் பார்க்க