ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி - யார் இந்த வேட...
இரு காா்கள் மோதல் 3 போ் பலத்த காயம்
வைரமடை அருகே வியாழக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வருந்தியபாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பொன்வேல் (24). இவா் தனது காரில் மனைவி ரூபிகா (24) மற்றும் அவரது தாயாா் தமிழரசி (68) ஆகியோருடன் வியாழக்கிழமை கரூா்-கோவை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
காா் வைரமடை செக்போஸ்ட் அருகே வந்தபோது, எதிரே கோவை மாவட்டம், வீரப்பம்பாளையம், அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் குருசாமி ராஜ் (41) என்பவா் ஓட்டி வந்த மற்றொரு காா், பொன்வேல் ஓட்டிச் சென்ற காா் மீது நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பொன்வேல், அவரது மனைவி ரூபிகா, அவரது தாயாா் தமிழரசி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக மூவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.