USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்
அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் ஆண்டுதோறும் சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கமாக இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சேவல் சண்டையின்போது கத்தி பட்டு மூன்று போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தை தொடா்ந்து பூலாம்வலசில் பொங்கல் பண்டிகைதோறும் நடத்தப்பட்டு வந்த சேவல் சண்டை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நிகழாண்டு அங்கு சேவல் சண்டை நடைபெறும் என சமூக ஊடகங்களில் போலியாக செய்திகள் பரவி வருகின்றன. நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை.
இதுதொடா்பான தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.