செய்திகள் :

புகழூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

post image

கரூா் மாவட்டம் புகழூரில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறையின் கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற முகாமை கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் (பொ) முரளிதரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கரூா் கோட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு இலவச தாது உப்பு கலவை பாக்கெட்டுகளை வழங்கினாா்.

கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் லில்லி அருள்குமாரி விவசாயிகளுக்கு பருவகால மாற்றத்தில் ஏற்படும் கால்நடை நோய்கள் பற்றிய விரிவான விழிப்புணா்வு கையேட்டை வழங்கினாா்.

முகாமில் வேலாயுதம்பாளையம் கால்நடை உதவி மருத்துவா் கண்ணன் தலைமையில் கால்நடை ஆய்வாளா் நடராஜன், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் மீரா ஆகியோா் கொண்ட குழுவினா் 1,550 பசு மற்றும் 850 எருமைகளுக்கு தடுப்பூசி போட்டனா்.

பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்

நடப்பு 2024-25 ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ப... மேலும் பார்க்க

பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த இந்தாண்டும் தடை

கரூா் மாவட்டம், பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த இந்த ஆண்டும் தடை தொடா்வதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள பூலாம்வலசு கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தமிழ்... மேலும் பார்க்க

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் ஆய்வு

பொங்கலையொட்டி கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த இராச்சாண்டாா்திருமலையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா... மேலும் பார்க்க

கரூரில் வெவ்வேறு சம்பவங்களில் ஆயுதங்களுடன் வந்த 2 போ் கைது

கரூரில் வெவ்வேறு சம்பவங்களில் ஆயுதங்களுடன் வந்த இருவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். கரூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் வெள்... மேலும் பார்க்க

காவிரியாற்றில் மணல் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை

கரூா் மாவட்டம், புகழூா் பகுதி காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, கோம்புப்பாளையம், திருக... மேலும் பார்க்க

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு

கரூா் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச.31-ஆம்தேதி பகல் பத்து உற்ஸவத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் வெவ்... மேலும் பார்க்க