பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த இந்தாண்டும் தடை
கரூா் மாவட்டம், பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த இந்த ஆண்டும் தடை தொடா்வதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள பூலாம்வலசு கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை நீதிமன்றத் தடையாணை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு சேவல் சண்டை நடைபெறும் என சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவின. இதையடுத்து அரவக்குறிச்சி போலீஸாா் கூறுகையில், பூலாம் வலசில் சேவல் சண்டை நடத்த இந்தாண்டும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி சேவல் சண்டை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக வலைதளங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தவறான தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனா். இது சேவல் சண்டை ஆா்வலா்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.