தங்கையை காதலித்தவரை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்... சிவகாசியில் பரபரப்பு!
கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி
கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும் ட்ராய் ஆா்ட் அகாதமி சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான ஓவியப் போட்டிகள் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கரூா், சேலம், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை விகேடி. குரூப் நிறுவனங்களின் தலைவா் விகேடி.பாலாஜி வழங்கினாா்.
ஏற்பாடுகளை என்ஆா்எம் கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளியின் செயலாளா் சிவசண்முகம், ஆலோசகா் சுப்ரமணியன், பள்ளி முதல்வா் வி. தங்கவேல் ஆகியோா் செய்திருந்தனா்.