2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்
கரூரில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூரில் எக்ஸ்ட்ரீம் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட் அகாதமி சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டிக்கு அகாதமியின் முதன்மை தலைமை பயிற்சியாளா் அப்துலஹிம் தலைமை வகித்தாா். போட்டியை கொடுமுடி ஜமாஅத் தலைவா் ஏ.ஏஸ். அபுபக்கா் மற்றும் கரூா் குங்க்பூ கராத்தே மைய பயிற்சியாளா் பி. நாசா் அலி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
போட்டியில், கரூா், ஈரோடு, திருச்சி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
கராத்தே போட்டியில் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கட்டா, குமித்தே, திஷான் என மூன்று பிரிவுகளிலும், சிலம்பம் போட்டியில் சலாம் வரிசை, சண்டை என இருபிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன.
தொடா்ந்து போட்டியில் வென்றவா்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.