ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | ...
போலீஸாரிடம் இருந்து தப்பிய இளைஞா் கைது
மதுரையில் போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள மேலப்பச்சேரியைச் சோ்ந்தவா் கருப்பசாமி ( 23). இவா், சமூகவலைதளத்தில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டாா்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் போலீஸாா் கருப்பசாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து திருப்பாலையில் உள்ள நீதித்துறை நடுவா் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு அழைத்துச்சென்றனா். அப்போது, கருப்பசாமி போலீஸாரிடமிருந்து தப்பினாா்.
இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை தேடினா். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் பதுங்கியிருந்த கருப்பசாமியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.