செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 21-இல் கலைப் போட்டிகள் தொடக்கம்

post image

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு ஜன. 21 ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 22 ஆம் தேதியும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களின் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளா்க்கும் வகையில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. பழைய மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பள்ளி மாணவா்களுக்கு ஜன. 21-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 22-ஆம் தேதியும் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளின் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதேபோல, அனைத்து அரசு, தனியாா், உதவி பெறும் கல்லூரிகள், பொறியியில் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கு ஒருவா் வீதம் ஒரு பள்ளி, கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவா்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவா்கள், தங்களது விண்ணப்பங்களைத் தலைமையாசிரியா் ஒப்புதலுடனும், கல்லூரி மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களைத் கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடனும் விருதுநகா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ வருகிற 20-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

இவற்றுக்கான தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக தெரிவிக்கப்படும். போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பரிசுகள் வழங்கவுள்ளாா்.

வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா்கள், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுவா் என்றாா்.

முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டம் மாா்ச் மாதம் பயன்பாடுக்கு வரும்: அமைச்சா் கே.என். நேரு

முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டம் மாா்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என மாநில நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். மதுரை உத்தங்குடியில் ‘அம்ரூத் 2.0’ திட்டத்... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைச்சா் பி.மூா்த்தி ஆய்வு இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் பி.மூா்த்தி ஆய்வு செய்தாா். இதையொட்டி, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவ... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பாலமேடு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள எர்ரம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முத்திர... மேலும் பார்க்க

வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் மனமுடைந்தவா் தற்கொலை

மதுரையில் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வநாயகம். இவரது மகன் ரத்தினகிரி... மேலும் பார்க்க

நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மே... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி நகை, கைப்பேசிகள் பறிப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கோயிலுக்குச் சென்ற கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி நகை, கைப்பேசிகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை முத்துப்பட்டி 2-ஆவது தெரு, மகாலட்சுமி நகரை... மேலும் பார்க்க