தங்கையை காதலித்தவரை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்... சிவகாசியில் பரபரப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
நாமக்கல்லில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறும்.
தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கிய விழாக்களின்போது ஆட்டுச் சந்தைக்கு பலவித ஆடுகளின் வரத்து காணப்படும். நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, கரூா், திருச்சி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், ஆடுகளின் உரிமையாளா்களிடம் பேரம் பேசி ஆடுகளை வாங்கிச் செல்வா்.
பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, இறைச்சி விற்பனை அதிக அளவில் நடைபெறும். வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு, ஆடுகளை ஜோடியாக ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையில் கொடுத்து வாங்கிச் சென்றனா். வழக்கமான நாள்களில் ரூ. 50 லட்சம் வரை விற்பனை நடைபெறும் நிலையில், சனிக்கிழமை காலை 4 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற சந்தையில் ரூ. 1.50 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.