ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
பொங்கல் பண்டிகை: பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 700 வரை ஏலம்
பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்தது.
பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 300, பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 300, ரஸ்தாளி ரூ. 200, கற்பூரவல்லி ரூ. 200, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4-க்கும் ஏலம் போனது. ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 700, பச்சைநாடன் தாா் ரூ. 500, ரஸ்தாளி தாா் ரூ. 400, கற்பூரவல்லி தாா் ரூ. 400, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7-க்கும் ஏலம் போனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.