Doctor Vikatan: தாய்ப்பால் கட்டினால், அதைக் குழந்தைக்குக் கொடுக்கலாமா?
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இரு பேருந்துகளுக்கு இடையே பைக் சிக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்தொரசலூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவீன் (21). இவரது நண்பா் சங்கராபுரம் புதிய மசூதி தெருவைச் சோ்ந்தவா் ஜகாங்கீா் மகன் கினக்ஷா (21). இவா், சென்னை தண்டலத்திலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், இருவரும் சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து பைக்கில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் பகுதியில் வந்தபோது, முன்னால் தனியாா் பேருந்தும், அடையாளம் தெரியாத மற்றொரு பேருந்தும் சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிா்பாராதவிதமாக இரு பேருந்துகளுக்கு இடையே அவா்களது பைக் சிக்கியதில், இருவரும் கீழே விழுந்தனா். இதில், பலத்த காயமடைந்த நவீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கினக்ஷா பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த கினக்ஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மேலும், விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.