USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு விருது
உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு புதுச்சேரி சேவை சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பிரேம்குமாா். இவா், டிச.31-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தாா்.
இவரது சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம், 8 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், பிரேம்குமாரின்குடும்பத்தினருக்கு, புதுச்சேரி மெட்ரோ ஜேசீஐ சங்கத்தினா் பாராட்டுத் தெரிவித்து சேவைக்கான விருதை வழங்கினா்.
நிகழ்வில், சங்கத் தலைவா் ஆரோக்கிய மாா்க்ரெட், சிவச்செல்வி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.