மகரஜோதி: புல்மேடு பகுதியிலிருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை
சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்
புதுச்சேரியில் ஃபென்ஜால் புயலின் போது சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் ஒன்றாக திகழும் புதுச்சேரி - கடலூா் தேசிய நெடுஞ்சாலை ஃபென்ஜால் புயல் மழை வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்தது.
இதனால், அந்த சாலையில் ஏற்பட்ட பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
இந்த நிலையில், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனா்.
அதன்படி, சாலை சீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.