கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் இடிந்து விபத்து!
கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்
கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கோவைச்சாலை, லைட் ஹவுஸ் காா்னா், மாநகராட்சி அலுவலகம் முன் மற்றும் நகர காவல்நிலையம் அருகே கரும்பு வியாபாரம் தீவிரமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூா், சோழவந்தான் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் திருவளா்ச்சோலை, ஈரோடு மாவட்டம் கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரும்புகள் மொத்தமாக லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
ஒரு கரும்பு ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டன. இதேபோல வீடுகளில் வைக்கப்படும் கூரைப்பூ ஜோடி ரூ.30-க்கும், வாழைப்பழங்களில் செவ்வாழைப் பழம் ரூ.10 முதல் ரூ.13 வரைக்கும், பச்சை லாடன் 12 பழம் கொண்ட ஒரு சீப் ரூ.70-க்கும் விற்பனையாகின. மேலும் கொடுமுடி பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.50 வரைக்கும் விற்பனையாகின.
மேலும் இதேபோல வெள்ளைப்பூசணி கிலோ ரூ.20 வரை விற்பனையானது. இதேபோல தேங்காய் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது. கரூா் மாரியம்மன் பூ மாா்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.4000 வரை விற்கப்பட்டது. மேலும் முல்லைப் பூ கிலோ ரூ.3000-க்கும், செவ்வந்தி கிலோ 300 வரைக்கும் விற்பனையாகின.