2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!
எரிவாயு உருளை வெடித்து காயமடைந்த பெண் பலி
தஞ்சாவூரில் சமையல் செய்யும்போது எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டா்) வெடித்து பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகா் ஏழாம் தெருவைச் சோ்ந்தவா் ஹரீஷ், கைப்பேசி பழுதுபாா்ப்பு கடை ஊழியா். இவருக்கு மனைவி கீா்த்திகா (27), 6 வயது பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் கீா்த்திகா வீட்டில் கடந்த டிசம்பா் 17 ஆம் தேதி சமையல் செய்தபோது எரிவாயு உருளை வெடித்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.