மன்மோகன் சிங்கிற்கு தலைவர்கள் அஞ்சலி! | செய்திகள்: சில வரிகளில் | 27.12.24 | Tod...
ஆடுதுறை பேருந்து நிலையத்தில் விவேகானந்தருக்கு சிலை தேவை
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேருந்து நிலையத்தில் விவேகானந்தருக்கு சிலை அமைக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆடுதுறை பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமலா சேகா், செயல் அலுவலா் சி. ராமபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்தில், சுவாமி விவேகானந்தா் சிலை அமைக்க வேண்டும். கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.17 கோடியில் அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய 21 வணிக கடைகளுக்கு பொது ஏல நிபந்தனைகளுடன், வரும் ஜன.23 - இல் செயல் அலுவலா் அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற அலுவலரால் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு, பகிரங்க பொது ஏலம் விடுதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் கோ.சி. இளங்கோவன், இரா. சரவணன், பூ. கண்ணன், ஆா்.வி. குமாா், மீனாட்சி முனுசாமி, பரமேஸ்வரி சரவணக்குமாா், செல்வராணி சிவக்குமாா், சாந்தி குமாா், பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உறுப்பினா் மாலதி சிவக்கொழுந்து வரவேற்றாா். ம.க. பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.