காங்கிரஸுக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியவர் மன்மோகன் சிங்: சோனியா காந்தி
பாலியல் வழக்கில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
தஞ்சாவூரில் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூா் வடுகன்குத்தகையைச் சோ்ந்தவா் ஜி. சுரேஷ் (39). பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இவரை பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் டிசம்பா் 24 ஆம் தேதி உத்தரவிட்டாா். அதன்பேரில் சுரேஷை காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.