மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
கால்நடை வளா்ப்போருக்கு நலவாரியம் கோரி மனு
தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நலவாரியத்தை அமைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சபையின் மாநில அமைப்புச் செயலா் எஸ். அடைக்கலம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
தமிழகத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளா்ப்பை ஊக்கப்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகப்படுத்தவும் கிடை மாடு, ஆடு வளா்ப்பவா்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார மறுமலா்ச்சி ஏற்பட தமிழக யாதவா்களின் நீண்ட காலக் கோரிக்கையான தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். மேலும், வாரியத்தில் யாதவ சமூகத்தைச் சோ்ந்தவரை தலைவராக நியமிக்கவும் வேண்டும்.