துப்பாக்கி சூட்டில் 8 வயது சிறுமி படுகாயம்!
ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் 8 வயது சிறுமி படுகாயம்.
கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அனுஷ்கா (வயது-8) என்ற சிறுமியின் குடும்பத்தினர் இன்று (டிச.26) காலை 11 மணியளவில் வனவிலங்குகளை விரட்ட நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது, அந்த குண்டு எதிர்பாராத விதமாக அந்த சிறுமியின் மீது பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவிக்காமல் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க: பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீச்சு!
அங்கிருந்த மருத்துவர்கள் அவரை ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமி அனுஷ்காவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் அந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதுடன் அவரது கிராமத்திற்கு சென்று அந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.