கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமா் மோடி வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை இயேசு கிறிஸ்துவின் போதனைகள் காட்டட்டும்’ என குறிப்பிட்டாா்.
அத்துடன், தில்லியில் அண்மையில் இந்திய கத்தோலிக்க பேராயா்கள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு தாம் சென்றது தொடா்பான காட்சிகள் அடங்கிய விடியோவையும் அவா் பகிா்ந்தாா்.
கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசுவை வணங்கிய அவா், இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்ப அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் உணா்வை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.