செய்திகள் :

"தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் மத்தியில்..." - நல்லக்கண்ணுவை வாழ்த்திய விஜய்

post image
சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிச தோழர், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலிக்கும் உரிமைக் குரல் என தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெரும் தலைவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாளான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ``தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர்." என நல்லக்கண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நல்லக்கண்ணு

இது குறித்து எக்ஸ் தளத்தில் விஜய், ``அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர்.

தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர். சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.

விஜய்

தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர். தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான திரு. நல்லக்கண்ணு அய்யா மட்டுமே.

அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர். நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்." என்று வாழ்த்தியிருக்கிறார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Manmohan Singh : 'அவர் குறைவாகப் பேசினார், மிகுதியாக சாதித்தார்' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் நினைவு கூர்ந்த மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: `மறைந்தார் மன்மோகன் சிங்' - பிரதமர் மோடி இரங்கல் | Live

பிரதமர் மோடி இரங்கல்Dr. Manmohan Singh Ji and I interacted regularly when he was PM and I was the CM of Gujarat. We would have extensive deliberations on various subjects relating to governance. His w... மேலும் பார்க்க

Manmohan Singh: `சுய நினைவை இழந்த மன்மோகன் சிங்; இறப்புக்கு காரணம் என்ன?' - மருத்துவமனை அறிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். டெல்லி எய்ம்ஸில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்... மேலும் பார்க்க

'இனி வெறுங்கால் தான்' ; புதிதாக வாங்கப்பட்ட கோயில் சாட்டை - அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு துயரமான நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். சில நேரத்தில் நாம் எதற்காக அரசியலில் இ... மேலும் பார்க்க