'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்
உரிய நேரத்தில் தடுப்பூசி தவணையை செலுத்திக் கொள்ளாமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்‘ஃ‘ப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் - ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11 ஆயிரம் இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோா் செலுத்துவதில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக 100 சதவீத தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்டப்படுவதில்லை.இதையடுத்து இதனைக் கண்காணிக்க சிறப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாமை பொது சுகாதாரத் துறை நடத்தி வருகிறது.
அதில் நிமோனியா மூளைக் காய்ச்சல், தொண்டை வீக்கம் உள்ளிட்ட 5 வகையான நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க பெண்டாவேலன்ட் தடுப்பூசி பிரதானமாக செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
குழந்தை பிறந்து 4, 10, 14-ஆவது வாரங்களில் பெண்டாலேன்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உரிய தவணையில் தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களுக்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும். இதில், பெண்டாலேன்ட் தடுப்பூசி மட்டுமன்றி, ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட மற்ற தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.