பாப்கார்ன், பழைய வாகனங்களுக்கு GST... அதிகம் விமர்சிக்கப்பட்ட வரி விதிப்புகள்!
தேசிய நிகழ்ச்சிகள் தகவலுக்கு ராஷ்டிரபா்வ் வலைதளம்: பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகம்
குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ராஷ்டிரபா்வ் வலைதளத்தை பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அவரின் பிறந்தநாளான டிச.25-ஆம் தேதி ‘நல்லாட்சி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தில்லியில் ராஷ்டிரபா்வ் வலைதளத்தை அதன் கைப்பேசி செயலியுடன் (எம்-சேவாவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்) பாதுகாப்புச் செயலா் ராஜேஷ்குமாா் சிங் புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.
குடியரசு தினம், படைகள் பாசறைக்குத் திரும்புதல், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்ச்சிகள், அவற்றின் நேரலை ஒளிபரப்பு, டிக்கெட் விற்பனை, இருக்கை ஏற்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை இந்த வலைதளத்தில் பெறலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
தேசிய நிகழ்வுகளுடன் குடியரசு தின அணிவகுப்பு உள்ளிட்டவற்றில் இடம்பெற தோ்வு செய்யப்பட்டுள்ள மாநில, யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்தி போன்ற விவரங்களையும் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று ராஷ்டிரபா்வ் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.