Trisha: `மகனை இழந்தேன்; மீண்டுவர கொஞ்ச காலம் தேவைப்படும்' - செல்லப்பிராணியின் இறப்பு குறித்து த்ரிஷா
நடிகை த்ரிஷாவிற்குச் செல்லப் பிராணிகள் என்றால் உயிர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி ஸ்டோரியில் பகிர்வதுண்டு.
சூட்டிங் ஸ்பாட், வெளிநாடு என எங்கு சென்றாலும் அங்கிருக்கும் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவது பழக்கம். த்ரிஷாவின் குடும்பத்தில் ஒருவராக நீண்ட நாள்களாக அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணி 'ஷோரோ'. அதனுடன் விளையாடும் விடியோக்களை, புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார். இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் காலை திடீரென ஷோரோ உயிரிழந்துவிட்டதாக சோகமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள த்ரிஷா, "என மகன் ஷோரோ இன்று காலை கிறிஸ்துமஸ் அன்று உயிர் பிரிந்தான். இந்த இழப்பு எனக்கு எவ்வளவு துயரமானது என்றும் என் வாழ்க்கை இனி அர்மற்றதாக நான் உணர்கிறேன் என்றும் என்னை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த அதிர்ச்சியில் நானும், என் குடும்பத்தினரும் உறைந்துபோய் இருக்கிறோம். இதிலிருந்து மீண்டு வர எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.