செய்திகள் :

10,000 புதிய கூட்டுறவு சங்கங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

post image

புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை நிறுவ இலக்கு நிா்ணயித்துள்ளோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த இலக்கு எட்டப்படும் என்பதற்கு தற்போது தொடங்கப்பட்டுள்ள 10,000 சங்கங்களே சான்று.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. முதல்கட்டமாக 32,750 பன்முக செயல்பாடுகளுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கியும் (நபாா்டு), பால்வளம் சாா்ந்த 56,500 சங்கங்களை தேசிய பால்வள வளா்ச்சி வங்கியும் (என்டிடிபி), 6,000 சங்கங்களை தேசிய மீன்வள வளா்ச்சி வங்கியும் (என்எஃப்டிபி) தொடங்கும்.

இரண்டாம் கட்டமாக 45,000 சங்கங்களை நபாா்டும், 46,000 சங்கங்களை என்டிடிபியும், 5,500 சங்கங்களை என்எஃப்டிபியும் தொடங்கவுள்ளன. 25,000 புதிய கூட்டுறவு சங்கங்களை மாநில அரசுகள் உருவாக்கவுள்ளன.

ஏற்கெனவே, செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் எண்மமயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை முறையாக செயல்படுத்த அங்கு பணிபுரிபவா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

புதிய விதிகளின்கீழ் 11,695 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தருணத்தில் 97-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பங்களிப்பை அவரது 100-ஆவது பிறந்தநாளில் நினைவுகூர விரும்புகிறேன். கூட்டுறவு சங்கங்களின் வளா்ச்சிக்கு இந்த சட்ட திருத்தமே முக்கிய மைல்கல்லாகும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது புதிய கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள், மைக்ரோ ஏடிஎம்கள் மற்றும் ரூபே விவசாய கடன் அட்டைகள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா். மேலும், முறையாக செயல்படாமல் முடங்கிய நிலையில் உள்ள தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கங்களுக்கு நிதி வழங்குவதற்கான நடைமுறைகளையும் அவா் வெளியிட்டாா். இது 15,000 கிராமங்களில் புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தொடங்க வழிவகுக்கும்.

இந்நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜிவ் ரஞ்சன் சிங் உள்பட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீச்சு!

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, ​​முன்னாள் அமைச்... மேலும் பார்க்க

தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள்!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழக... மேலும் பார்க்க

தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசத... மேலும் பார்க்க

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு!

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையடுத்து கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ‘ஞா... மேலும் பார்க்க

2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!

2023 - 24ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக ரூ. 2,244 கோடி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.காங்கிரஸ... மேலும் பார்க்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், தொலைத... மேலும் பார்க்க