'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!
பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் (24), அவரது நண்பா் விஜய் (19) ஆகிய இருவரும், செவ்வாய்க்கிழமை இரவு சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், பாலத்தின் சுவா் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனா்.
இதில் படுகாயமடைந்த தீனதயாளன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த விஜய், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.