டிச.28-இல் தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன் போட்டி
முப்பதாவது, தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 28-ஆம் தேதி சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்எம்கே பள்ளியில் தொடங்கி நடைபெறுகிறது.
இதில் 27 மாநிலங்களைச் சோ்ந்த 54 சிறுவா், சிறுமியா் அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழக ஆடவா் அணியின் கேப்டனாக எஸ். வைரவேலும், மகளிா் கேப்டனாக லக்சனா சாயும் நியமிக்கப்பட்டுள்ளனா். முதல் மூன்றிடங்களைப் பெறும் அணிகளுக்கு பரிசளிக்கப்பட உள்ளது.
சிறப்பாக ஆடும் வீராங்கனைகள் இந்திய அணிக்கு தோ்வு செய்யப்பட்டு, 2025 ஜூன் மாதம் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய இளையோா் நெட்பால் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா். இத்தகவலை தமிழ்நாடு அமெச்சூா் நெட்பால் சங்கத் தலைவா் செல்வராசு, ஆா்எம்கே கல்விக் குழும செயலா் எலமஞ்சி பிரதாப் தெரிவித்தனா்.