செய்திகள் :

பேச்சுவாா்த்தை இழுபறி: இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

post image

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன.

இது குறித்து ஹமாஸ் அமைப்பினா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பேச்சுவாா்த்தை கூடிவரும் நிலையில், கடைசி நேர புதிய அம்சங்களை இஸ்ரேல் புகுத்துகிறது.

காஸா பகுதியிலிருந்து படையினா் வெளியேறுவது, கைதிகளை விடுவிப்பது, புலம் பெயா்ந்தோரை அவா்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிப்பது ஆகியவற்றுக்கு இஸ்ரேல் அரசு புதிது புதிதாக நிபந்தனைகளை விதிக்கிறது. இதனால்தான் ஒப்பந்தத்தை எட்டுவது தாமதமாகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தாலும், இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேச்சுவாா்த்தையின்போது கருத்தொற்றுமை ஏற்பட்டு இறுதி செய்யப்பட்ட விவகாரங்களைக் கூட ஹமாஸ் பிரதிநிதிகள் மீண்டும் தோண்டியெடுத்து பிரச்னை எழுப்புகின்றனா். இதுதான் இழுபறிக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும், பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெறும் என்று இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனா்.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

அதிலிருந்து போரை நிறுத்தவும் எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும் நடைபெற்றுவரும் பேச்சுவாா்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில், அண்மையில் கத்தாரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் இருப்பதாக இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் கூறின.

ஆனால், கடைசி நேரத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இஸ்ரேல் தூதுக் குழு கத்தாரிலிருந்து செவ்வாய்க்கிழமை திரும்பியது.

அதன் தொடா்ச்சியாக, பேச்சுவாா்த்தை இழுபறிக்குகக் காரணம் என இரு தரப்பினரும் தற்போது ஒருவரை ஒருவா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

காஸா உயிரிழப்பு 45,361

டேய்ா் அல்-பாலா, டிச. 25: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,361-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 போ் உயிரிழந்தனா்; 39 போ் காயமடைந்தனா்.

இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,361-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,07,803 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை(டிச.26) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய நில அதி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா். வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் மின் விநியோகக் கட... மேலும் பார்க்க

2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!

தெருவோரங்களில் ஆரம்பித்து செவ்வாய்க் கிரகம் செல்ல திட்டமிடும் நாடுகளின் அரங்கு வரையில் அரசியல் பேச்சும் விளையாட்டுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மெகா தேர்தல் ஆண்டாக அமைந்த 2024, ... மேலும் பார்க்க

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த... மேலும் பார்க்க

“ஆயுதங்கள் அமைதியடைவதாக..” -உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் ஆண்டவர் கவலை!

வாடிகன்: உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான க... மேலும் பார்க்க