சென்னையில் பரவலாக மழை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்கி வருவதால் சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், நந்தனம், அண்ணா பல்கலை., தரமணி, கிண்டி, அசோக் நகா், வடபழனி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அண்ணா நகா், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், மாம்பலம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் மதுரவாயல், அமைந்தகரை, பூந்தமல்லி, எண்ணூா் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
காலை முதலே தொடா்ந்து சாரல் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
சென்னையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (டிச. 26, 27) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.