தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்
கேள்விக்குள்ளாகும் பும்ராவின் பந்துவீச்சு..! நீக்கப்படுவரா?
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு குறித்து ஆஸி.யின் அனுபவம் வாய்ந்த வர்ணனையாளர் ஐயான் மௌரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றது. 2ஆவது டெஸ்ட்டில் ஆஸி. வெற்றி பெற்றது. 3ஆவது போட்டி டிரா ஆனது.
4ஆவது போட்டி மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக ஆஸி. அனுபவம் வாய்ந்த வர்ணனையாளர் ஐயான் மௌரிஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
ஐசிசி விதியின்படி முழங்கை 15 டிகிரி கோணத்தினை தாண்டி மடக்கக்கூடாது. அதை தாண்டி மடக்கினால் பந்துவீச அனுமதியில்லை.
அவர் பேசியதாவது:
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சினை ஏன் யாரும் கேள்விகேட்கவில்லை. இது அரசியல் ரீதியாக ஒரு பிரிவினருக்கு சாதகமாக அமைவதில்லையா? அவர் பந்தினை எறிகிறார் என நான் கூறவில்லை. ஆனால், அவர் பந்தினை வீசும்போது அவரது கையின் இடத்தினை ஆராய வேண்டும் என்றார்.
முன்னாள் ஆஸி. கேப்டன் கிரேக் சேப்பல் பும்ராவுக்கு ஆதரவாக பேசினார். பும்ராவின் கை மிகை நீட்டமாக இருப்பதால் ஹைபர்மொபிலிடி என்ற வகைமையில் அது விதிக்குள்பட்டே வருவதாகசேப்பல் விளக்கம் அளித்தார்.
பும்ராவின் பந்துவீச்சினை டிராவிஸ் ஹெட் தவிர மற்ற எந்த ஆஸ்திரேலிய வீரர்களும் சரியாக விளையாடவில்லை. பும்ராவினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறுகிறது என சொல்லும் அளவுக்கு சிறப்பாக பந்துவீசுகிறார்.
ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர் (53 விக்கெட்டுகள்) என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.