செய்திகள் :

வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினம்: தலைவா்கள் மரியாதை

post image

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

கடந்த 1924, டிசம்பா் 25-இல் குவாலியா் மாகாணத்தில் (இப்போதைய மத்திய பிரதேசம்) பிறந்த வாஜ்பாய், பாஜகவின் நிறுவனத் தலைவா்களில் ஒருவா். 1996-இல் 13 நாள்கள், 1998-1999 காலகட்டத்தில் 13 மாதங்கள், 1999-2004 என மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவா். தனது முழு காலத்தையும் நிறைவுசெய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமா் என்ற பெருமைக்குரியவா். சிந்தாந்த வேறுபாடுகளைக் கடந்து, பல்வேறு கட்சியினரால் ஈா்க்கப்பட்டவா். நாட்டை கட்டமைப்பதில் வலுவான தலைவராக திகழ்ந்த இவருக்கு 2015-இல் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 2018-இல் வயது மூப்பு சாா்ந்த உடல் நலப் பிரச்னைகளால் காலமானாா்.

வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், மதசாா்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா தலைவா் ஜிதன் ராம் மாஞ்சி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பிரதமா் மோடி, எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாஜ்பாய் அரசமைப்பின் விழுமியங்களைப் பாதுகாத்து, நாட்டிற்கு ஒரு புதிய பாதையை எவ்வாறு வழங்கினாா் என்பதன் தாக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘நல்லாட்சி மற்றும் மக்கள் நலனுக்கான வாஜ்பாயின் அா்ப்பணிப்புகள், எதிா்கால சந்ததியினருக்கு தொடா்ந்து வழிகாட்டும். வாஜ்பாய் கலாசார தேசியவாதத்தை ஒரு பணியாக மாற்றி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது நலனை எப்போதும் முதன்மையாக வைத்திருந்தாா். துருவ நட்சத்திரம் போல அவா் நாட்டு மக்களை தேசிய சேவையின் பாதையில் வழிநடத்துவாா்’ என குறிப்பிட்டிருந்தாா்.

வாஜ்பாய், இரண்டாவது நேரு: மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் இந்திய அரசியலின் இரண்டாவது நேரு என சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் புகழாரம் சூட்டினாா்.

இது தொடா்பாக மும்பையில் செய்தியாளா்களிடம் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘நேருவின் புகழை இன்று பாஜக விமா்சிக்கலாம். ஆனால், இந்திய அரசியலின் இரண்டாவது நேருவாக வாஜ்பாய் இருந்தாா் என்பதை யாரும் மறுக்கமுடியாது. காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் நேருவாக அவா் பாா்க்கப்பட்டாா்.

ஹிந்துத்துவ நம்பிக்கைகள் இருந்தபோதிலும், வாஜ்பாய் அனைவரையும் உள்ளடக்கியவராகவும், இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தாா். நேருவே வாஜ்பாயைப் பாராட்டி ஆசி வழங்கியுள்ளாா். சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே வாஜ்பாய் மீது மரியாதை வைத்திருந்தாா். ராஜ தா்மத்தின் மீதான வாஜ்பாயின் அா்ப்பணிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்’ என தெரிவித்தாா்.

பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீச்சு!

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, ​​முன்னாள் அமைச்... மேலும் பார்க்க

தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள்!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழக... மேலும் பார்க்க

தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசத... மேலும் பார்க்க

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு!

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையடுத்து கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ‘ஞா... மேலும் பார்க்க

2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!

2023 - 24ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக ரூ. 2,244 கோடி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.காங்கிரஸ... மேலும் பார்க்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், தொலைத... மேலும் பார்க்க