செய்திகள் :

கொன்ஸ்டாஸ் வார்னரின் ‘குளோன்’ இல்லை: கிரேக் சேப்பல்

post image

இளம் ஆஸி. வீரர் சாம் கொன்ஸ்டாஸ் முன்னாள் ஆஸி. டேவிட் வார்னரின் குளேன் இல்லை என கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் மெல்போர்னில் அறிமுகமாகிறார்.

1993இல் ரிக்கி பாண்டிங் அடித்ததுபோல் ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் கொன்ஸ்டாஸ் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

சாம் கொன்ஸ்டாஸ் 468ஆவது ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரராக களமிறங்கவுள்ளார். இதற்கு முன்பு இளம் வயதில் (18 வயதில்) பாட் கம்மின்ஸ் 2011இல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நாதன் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக சாம் கொன்ஸ்டாஸ் அணியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

மனத்திட்பமும் திறமையும்

இந்த நிலையில் ஆஸி. முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கூறியதாவது:

19 வயதில் கொன்ஸ்டாஸ் விளையாடுவது வரலாற்றில் செங்குத்துப்பாறையாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட்டில் தொடக்க வீரராக களமிறங்கும் இளம் வீரராக இருக்கிறார். அதிலும் பாக்ஸிங் டே போட்டியில் களமிறங்குவது ஆச்சரியமாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது. ரன்கள் அடிக்கவும் தகவமையவும் கொன்ஸ்டாஸுக்கு மனத்திட்பமும் திறமையும் இருக்கிறது.

தேர்வுக்குழுவினரின் வேலை சாம்பியன் ஆகக்கூடிய திறமை உள்ளவர்களை தேர்வுசெய்வதேயாகும். ரன்கள் அடிப்பவர்களை தேர்வு செய்யக்கூடாது. நீங்கள் சரியான வீரரை தேர்ந்தெடுத்து, பாதியில் நீக்கினாலும் அவர்களுக்கு தேவையானதை கற்று மீண்டும் வலுவாக வருவார்கள்.

கொன்ஸ்டாஸ் வார்னரின் குளோன் இல்லை

கொன்ஸ்டாஸ் வார்னரின் குளோன் இல்லை. இயற்கையாகவே அவருக்கு அடுத்து அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது ஆடத்தின் சிறப்பே அதிரடியும் பாதுகாப்பாக விளையாடுவதும்தான். அந்த சமநிலைதான் அவரை எந்தவிதமான பந்துவீச்சில் இருந்தும் வெற்றிபெற வைக்கிறது.

வார்னரின் பாணி துணிச்சலாக அதிரடியாக விளையாடுவது. கொன்ஸ்டாஸ் திட்டமிட்டு ரிஸ்க் எடுப்பவர். இதற்காக கொன்ஸ்டாஸுக்கு திறமையில்லை எனக் கூறமுடியாது, அவரது திறமை அடிப்படையான கிரிக்கெட் ஷாட்டுகளுடன் பிணைந்துள்ளது என்றார்.

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான திட்டமிடலில் தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இடம்பெறுமென கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தகுதிபெற... மேலும் பார்க்க

ஜோ ரூட் முதலிடம்: ஆஸி வீரர்கள் முன்னேற்றம், இந்திய வீரர்கள் சரிவு!

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. 4ஆவது போட்டி நாளை (டிச.26) மெல்போர்னி... மேலும் பார்க்க

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பும்ரா..!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்... மேலும் பார்க்க

கேள்விக்குள்ளாகும் பும்ராவின் பந்துவீச்சு..! நீக்கப்படுவரா?

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு குறித்து ஆஸி.யின் அனுபவம் வாய்ந்த வர்ணனையாளர் ஐயான் மௌரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!

பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஃபிளேயிங் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி மெல்போர்னில் நடக்கவிருக்... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கும் பும்ரா, ஜடேஜா!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்க இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா காத்திருக்கிறார்கள்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொ... மேலும் பார்க்க