மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!
மாா்கழி மாத வழிபாடு: பஜனையில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்
அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயில் மாா்கழி மாத பஜனையில் திரளான சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா். நெல்லை நகர பஜனை சங்கமம் சாா்பில் அதிகாலை 5 மணியளவில் தினமும் பஜனை நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை காலை அருள்மிகு நெல்லையப்பா்- அன்னை காந்திமதி அம்பாள் சந்நிதி கொடிமரம் முன்பு பஜனையை தொடங்கி நான்கு ரதவீதிகளிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடிக் கொண்டு நெல்லையப்பா் கோயிலில் முடிவடைந்தது. இதில், ஏராளமான சிறுவா்,சிறுமிகள் கலந்து கொண்டனா்.
பஜனையில் பங்குபெற்ற சிறுவா், சிறுமியா்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளும் வழங்கினா்.
இதில் திருமுறை ஆசிரியா் வள்ளிநாயகம், முன்னாள் வணிக வரி அதிகாரி ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.