துணை முதல்வர் : பற்ற வைத்த பாமக; தவிர்த்த துரைமுருகன் - அப்செட்டில் இருக்கிறாரா ...
ஹிந்தி நடிகருக்கு முதல்வர் பதவியா?
ஹிந்தி நடிகர் சோனு சூட்டுக்கு முதல்வர், துணை முதல்வர், எம்.பி. பதவிகளுக்கான வாய்ப்புகள் கிடைத்ததாகக் கூறியுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகரும் தயாரிப்பாளருமான சோனு சூட், பொது மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். கரோனா தொற்றுக் காலத்தில் பல்வேறு மக்களுக்கு உதவி செய்ததன் மூலம் இவர் பிரபலமானார்.
இவர் சமீபத்தில் தனியார் பேட்டியில் கூறியதாவது, ``எனக்கு முதல்வர் பதவி வாய்ப்பு வழங்கினார்கள். அதனை மறுத்தபோது, துணை முதல்வர் பதவியை வழங்கினர். மாநிலங்களவையிலும் ஒரு பதவியை வழங்கினர். ஆனால், எதையும் நான் விரும்பவில்லை. இரண்டு காரணங்களுக்காகத்தான் மக்கள் அரசியலில் இணைகிறார்கள். பணம் சம்பாதிக்க அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்காகத்தான்.
ஆனால், இரண்டிலுமே எனக்கு ஆர்வம் இல்லை. மக்களுக்கு உதவுவதற்காக அரசியலில் இணைய வேண்டுமென்றால், நான் ஏற்கெனவே அதைச் செய்து வருகிறேன்.
இதையும் படிக்க:இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்படும்: ஆம் ஆத்மி
அரசியலில் இணைந்தபின் மக்களுக்கு உதவ வேண்டுமென்றால், நான் வேறொருவரிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும். ஆனால், இப்போது நான் யாரிடமும் கேட்கத் தேவையில்லை. அரசியலில் இணைந்தால் என்னுடையை சுதந்திரத்தை இழக்க நேரிடும்.
அரசியல் இணைந்தால் தில்லியில் வீடு, உயர் பதவிகள், உயர்தரப் பாதுகாப்பு, ஆடம்பரமான வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலரும் என்னிடம் கூறினர்.
ஒருவர் பிரபலமடையத் தொடங்கும்போது, அதிக உயரத்துக்கு செல்வர். ஆனால், உயரம் அதிகரிக்க அதிகரிக்க ஆக்ஸிஜனின் அளவு குறைந்து விடும். நான் இப்போது தயாராக இல்லை. இப்போது எனக்குள் ஒரு நடிகர்தான் இருக்கிறார். நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல’’ என்று தெரிவித்தார்.