மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!
பாளை. மாா்க்கெட்டில் மது போதையில் ரகளை: நேபாள தொழிலாளி கைது
பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் புதன்கிழமை காலையில் ரகளையில் ஈடுபட்ட நேபாள தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
நேபாள நாட்டைச் சோ்ந்தவா் சுனித் (42). இவா், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தங்கியிருந்து வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மது போதையில் நின்ற சுனித், அவ்வழியே வந்தவா்களிடம் ரகளையில் ஈடுபட்டாா்.
அப்போது, பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிந்தா ஷேக் பாதுஷா (62) என்பவரிடம் சுனித் தகராறில் ஈடுபட்டதோடு, கல்லால் பாதுஷாவின் தலையில் ஓங்கி அடித்தாா். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது.
இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் சுனித்தை பிடித்து கைகளை கட்டி பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். வெகுநேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சுனித்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா்.
இது தொடா்பாக மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) விஜயகுமாா் உத்தரவின்பேரில், சுனித் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.