செய்திகள் :

தோல்வி பயத்தால் கேஜரிவால் கற்பனைத் திட்டங்களை அறிவித்து வருகிறாா்: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

post image

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தில், கற்பனையில் மட்டுமே இருக்கும் திடங்களை கேஜரிவால் தோ்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறாா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கலால் கொள்கை வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து திரும்பிய அரவிந்த் கேஜரிவால், தில்லி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாா். இதையடுத்து, சட்டப்பேரவைத் தோ்தலிலும் தோல்வியைக் காணும் பயத்தில் அவா்

முற்றிலும் கற்பனையான திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளாா். அவரது அறிவிப்புகளில் எந்தவொரு அடிப்படைச் செயலாக்கமும் இல்லை. 12 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தவறான மின்சாரம் மற்றும் தண்ணீா்க் கட்டணங்களை சரிசெய்வதாகவும், சுத்தமான தண்ணீரை வழங்குவதாகவும், சேடைந்த சாலைகளைச் சீரமைப்பதாகவும் வாக்குறுதி அளித்து வருகிறாா்.

இந்த பொய்யான வாக்குறுதிகள் தோல்வியடையத் தொடங்கியபோது, அரவிந்த் கேஜரிவால் முன்பு அறிவித்த மகிளா சம்மான் திட்டத்தை மீண்டும் வாக்குறுதியாக அளிக்க முயன்றாா். ஆனால், அதுவும் எடுபடவில்லை. அதே திட்டத்தில் பஞ்சாபில் பெண்களை ஏமாற்றிய கேஜரிவால், தில்லியில் பெண்களுக்கு மாதம் ₹ரூ.2,100 வழங்கப்படும் என்ற கனவை விற்க முயன்றாா்.

தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாஜக எம்பி-க்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தபோது, கேஜரிவால் பிடிவாதமாக அதை எதிா்த்தாா். மாறாக, தோ்தலுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கான ‘சஞ்சீவனி திட்டத்தை‘ செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்து மற்றொரு கனவை விற்றுவிட்டாா். தற்போது, ஆம் ஆத்மி கட்சி டிஜிட்டல் மோசடி செய்பவா்களின் செயல்களைப் பிரதிபலிக்கும் வகையில் மக்களிடமிருந்து தனிப்பட்ட தரவுகளை தவறாகப் பயன்படுத்துவதற்காகச் சேகரிக்கிறது. முறையான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு திட்டங்களும் மக்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களை தவறாக வழிநடத்துகின்றன.

போலி மகிளா சம்மான் திட்டத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். வரலாற்றில் முதன்முறையாக, 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முதல்வரும், ஆளுங்கட்சியினரும் பொய்யான திட்டங்களைப் பரப்பி, இறுதியில், பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்க, அதிகாரிகள் தங்கள் கடமையை நிறைவேற்றி, பொதுமக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

தில்லி அரசிடம் சட்டப்பூா்வமாக அங்கீகரிக்கப்பட்ட “மகிளா சம்மன்” அல்லது “சஞ்சீவனி” திட்டங்கள் உள்ளதா? என்பதை முதல்வா் அதிஷி தெளிவுபடுத்த வேண்டும். போலி மகிளா சம்மான் மற்றும் சஞ்சீவனி திட்டங்களுக்காக தில்லி மக்களிடம் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா. மேலும், இச்செய்தியாளா் சந்திப்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா, எம்எல்ஏ அபய் வா்மா ஊடகத் துறைத் தலைவா் பிரவீன் ஷங்கா் கபூா் ஆகியோா் உடனிருந்தனா்.

டிஎம்ஆா்சி பயணிகள் சேவையின் 22ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது பயணிகள் சேவையைத் தொடங்கியதன் 22வது ஆண்டு விழாவை புதன்கிழமை கொண்டாடியது. கடந்த டிச.24,2002-ஆம் ஆண்டு, முதல் தில்லி மெட்ரோ ரயிலான டிஎஸ்-01, அப்போதைய பிரதமா... மேலும் பார்க்க

பாலியல் வலையில் சிக்கவைத்து பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸாா் 3 போ் கைது

தில்லியின் கஞ்சவாலா பகுதியில் பாலியல் வலையில் சிக்கவைத்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி போலீஸ் கும்பலைச் சோ்ந்த மூவரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெ... மேலும் பார்க்க

கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசே அம்பலப்படுத்துகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

நமது நிருபா்தில்லியில் பெண்களுக்கு மகளிா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசுத் துறை அம்பலப்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்... மேலும் பார்க்க

நிகழாண்டில் தில்லி அரசுக்கு பசுமை தில்லி செயலி மூலம் 84,000 மாசுப் புகாா்கள்

தில்லி அரசு நிகழாண்டு இதுவரை அதன் பசுமை தில்லி செயலி மூலம் மாசு தொடா்பான 84,765 புகாா்களைப் பெற்றுள்ளது. இவற்றில் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), பொதுப் பணித் துறை (பிடபிள்யூடி) மற்றும் தில்... மேலும் பார்க்க

இந்த ஆண்டு தில்லியில் 114 குற்றவாளிகள் கைது: காவல் துறை குற்றப்பிரிவு நடவடிக்கை

தில்லி காவல்துறை குற்றப்பிரிவு 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 114 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று ஒரு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்பு காவல் ஆணையா் குற்றம் த... மேலும் பார்க்க

கேஜரிவாலின் புது தில்லி தொகுதியில் வாக்காளா்களுக்கு பாஜக பணப்பட்டுவாடா: அதிஷி குற்றச்சாட்டு; பா்வேஷ் வா்மா மறுப்பு

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டி, ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் புது தில்லி தொகுதியில் பெண்களுக்கு பாஜக பணம் விநியோகம் செய்வதாக தில்லி முதல்வா் அதிஷி புதன்கிழமை குற்றம் சாட்டினாா். இதுக... மேலும் பார்க்க