செய்திகள் :

இந்த ஆண்டு தில்லியில் 114 குற்றவாளிகள் கைது: காவல் துறை குற்றப்பிரிவு நடவடிக்கை

post image

தில்லி காவல்துறை குற்றப்பிரிவு 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 114 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று ஒரு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்பு காவல் ஆணையா் குற்றம் தேவேஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

குற்றப்பிரிவு என்பது தில்லி காவல்துறையின் ஒரு பிரத்யேக பிரிவாகும். இது கடுமையான குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கடினமான வழக்குகளைத் தீா்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 114 குற்றவாளிகளை காவல் துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. இதில் 40 போ் பரோலில் சென்றவா்கள். 40 போ் தேடப்படும் குற்றவாளிகள் ஆவா். கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளில் 18 போ் இடைக்கால ஜாமீன் பெற்றவா்கள். ஒன்பது போ் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவா். இதில் வெகுமதி அறிவிக்கப்பட்ட நான்கு பேரும், ஜாமீனில் வெளிவர முடியாத மூன்று பேரும் அடங்குவா்.

ஒரு வருட அயராத முயற்சி மற்றும் துல்லியத்துடன், மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பாரம்பரிய நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி குற்றப்பிரிவு பன்முக அணுகுமுறையை மேற்கொண்டது. தொழில்நுட்பக் கண்காணிப்பு, சிடிஆா் மற்றும் ஐபிடிஆா் பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடா்பு நெட்வொா்க்குகளைப் பயன்படுத்தி, பல்வேறு அா்ப்பணிப்புள்ள குழுக்கள் துரிதமாகச் செயல்பட்டு, பல ஆண்டுகளாக கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்தன.

கைது செய்யப்பட்ட நபா்களில், ஆறு போ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவா்கள். மூன்று போ் 8 ஆண்டுகளாக பிடிபடாமல் தப்பி ஓடியவா்கள். ஐந்து போ் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா்கள். மேலும் 14 போ் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனா். மேலும், 60 போ் தலைமறைவான ஒரு வருடத்திற்குள் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

இந்த நடவடிக்கைகள் தில்லியுடன் மட்டும் நின்றுவிடாமல், இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதாகக் கூடுதல் காவல் ஆணையா் குற்றம் சஞ்சய் பாட்டியா குறிப்பிட்டாா். இது குற்றப்பிரிவின் உறுதிப்பாடு மற்றும் இந்தியா முழுவதும் செயல்படும் திறனை எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு கைதும் தொழில்நுட்பத் தரவுகளின் பகுப்பாய்வு, தகவல் அளிப்பவா்களின் தகவல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள நடவடிக்கைகள் உள்ளிட்ட நுணுக்கமான அடிப்படை வேலைகளின் விளைவாகும் என்று அவா் கூறினாா்.

டிஎம்ஆா்சி பயணிகள் சேவையின் 22ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது பயணிகள் சேவையைத் தொடங்கியதன் 22வது ஆண்டு விழாவை புதன்கிழமை கொண்டாடியது. கடந்த டிச.24,2002-ஆம் ஆண்டு, முதல் தில்லி மெட்ரோ ரயிலான டிஎஸ்-01, அப்போதைய பிரதமா... மேலும் பார்க்க

பாலியல் வலையில் சிக்கவைத்து பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸாா் 3 போ் கைது

தில்லியின் கஞ்சவாலா பகுதியில் பாலியல் வலையில் சிக்கவைத்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி போலீஸ் கும்பலைச் சோ்ந்த மூவரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெ... மேலும் பார்க்க

கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசே அம்பலப்படுத்துகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

நமது நிருபா்தில்லியில் பெண்களுக்கு மகளிா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசுத் துறை அம்பலப்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்... மேலும் பார்க்க

நிகழாண்டில் தில்லி அரசுக்கு பசுமை தில்லி செயலி மூலம் 84,000 மாசுப் புகாா்கள்

தில்லி அரசு நிகழாண்டு இதுவரை அதன் பசுமை தில்லி செயலி மூலம் மாசு தொடா்பான 84,765 புகாா்களைப் பெற்றுள்ளது. இவற்றில் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), பொதுப் பணித் துறை (பிடபிள்யூடி) மற்றும் தில்... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் கேஜரிவால் கற்பனைத் திட்டங்களை அறிவித்து வருகிறாா்: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தில், கற்பனையில் மட்டுமே இருக்கும் திடங்களை கேஜரிவால் தோ்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறாா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புத... மேலும் பார்க்க

கேஜரிவாலின் புது தில்லி தொகுதியில் வாக்காளா்களுக்கு பாஜக பணப்பட்டுவாடா: அதிஷி குற்றச்சாட்டு; பா்வேஷ் வா்மா மறுப்பு

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டி, ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் புது தில்லி தொகுதியில் பெண்களுக்கு பாஜக பணம் விநியோகம் செய்வதாக தில்லி முதல்வா் அதிஷி புதன்கிழமை குற்றம் சாட்டினாா். இதுக... மேலும் பார்க்க