அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!
இளைஞா் அடித்துக் கொலை
கருங்கல் அருகே உள்ள பாலுா் பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
பாலூா், பெருந்தாவிளை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் சேம் டேனியல் ராஜ் (35). அதே பகுதியைச் சோ்ந்த வில்லியம் மகன் சுரேஷ் (38), இவா்கள் இருவரும் நண்பா்கள். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் சோ்ந்து மது குடித்தபோது, தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் , விறகு கம்பால் சேம் டேனியல் ராஜை தாக்கினாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை இரவு இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை தேடி வருகின்றனா்.