`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த த...
கிறிஸ்துமஸ் விடுமுறை: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் புதன்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
குமரி மாவட்டத்தில் தற்போது அதிகாலை மற்றும் இரவில் குளிரும், பகலில் மிதமான வெயிலும் நிலவுகிறது.
மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை காரணமாக இந்த அருவிக்கு புதன்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்கள் அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சமாக குளித்து மகிழ்ந்தனா். இது போன்று இங்குள்ள நீச்சல் குளம், சிறுவா் பூங்கா, படகு தளம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.