செய்திகள் :

Gold: இந்த ஆண்டில் தங்கத்தின் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறதா? - 2024 இல் தங்கத்தின் ஏற்ற, இறக்கங்கள்

post image

இந்திய வீடுகளில் சொந்தபந்தம் இல்லாமல் கூட ஒரு விசேஷம் நடந்துவிடும். ஆனால், தங்கம் இல்லாமல் அணுவும் அசையாது. அந்த அளவுக்குத் தங்கத்திற்கு இந்தியக் குடும்பங்கள் முக்கியத்துவம் தரும்.

2024 ஆம் ஆண்டு கடைசியில் தங்கம் விலை ரூ.70,000-த்தை தொட்டுவிடும் என்று நிபுணர்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கூறியிருந்தார்கள். ஆனால், 'தொட்டதா?' என்று கேட்டால், 'இல்லை' என்பதுதான் பதில். இந்த ஆண்டின் தங்கம் விலை ரீவைண்டை பார்ப்போம். வாங்க...

தங்கம்

ஜனவரி 1-ம் தேதி...

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,910 ஆகவும், பவுன் ஒன்றுக்கு ரூ.47,280 ஆகவும் விற்பனை ஆகி 2024 ஆம் ஆண்டு சிறப்பாகத் தொடங்கியது. அதன் பின்னர், ஜனவரி மாதம் முழுவதும் கொஞ்சம் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலையில் அதிக அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

கடந்த பிப்ரவரி மாதப் பாதியில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5,750 ஆகவும், அதற்குக் கீழும் அல்லது சற்று மேலும் விற்பனை ஆனது. அப்போது, தங்கத்தின் பவுன் விலை ஏறத்தாழ ரூ.46,000 ஆக இருந்தது.

சாது டு ஜெட் வேகம்!

பிப்ரவரி மாதம் முழுவதும் சற்று சாதுவாக இருந்த தங்கம் விலை, மார்ச் மாதத் தொடக்கத்திலேயே ஜெட் வேகத்தைத் தொடங்கியது. மார்ச் மாதம் முழுவதும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,000 முதல் ரூ.6,370 வரை சென்றது. அப்படிப் பார்த்தால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.48,000 முதல் 50,960 வரை விற்பனை ஆனது. ஆக, தங்கம் விலை இந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் கிட்டதட்ட ரூ. 3,000 வரை உயர்ந்துள்ளது.

மார்ச் மாதம் தொடங்கிய ஜெட் வேகம் ஏப்ரல் மாதத்தில் இன்னும் எகிறி ஏப்ரல் கடைசியில் சற்று இறங்கியது. தங்கம் விலை ஏப்ரல் மாத முதல் நாள் கிராமுக்கு ரூ.6,445-ல் விற்பனை ஆகத் தொடங்கி ஏப்ரல் 19 ஆம் தேதி கிராமுக்கு ரூ.6,890 ஆக விற்பனை ஆனது.

ஏப்ரல் 19-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு 55,120 ஆக விற்பனை ஆனது. அதன் பின்னர், படிப்படியாகக் குறைந்து ஏப்ரல் 30-ம் தேதி கிராமுக்கு ரூ.6,750-க்கும், பவுனுக்கு ரூ.54,000 ஆக விற்பனை ஆனது. மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை கிட்டதட்ட ரூ.5,000 வரை தங்கம் விலை ஏறி, பின்னர், கடைசியில் ரூ.1,000 வரை குறைந்துள்ளது.

குறைவு...

மே மாதம் முதல் நாளே தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 ஆக குறைந்து ரூ.6,635 ஆகவும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080 ஆகவும் விற்பனை ஆனது. பின்னர் ஏறுமுகத்தில் சென்று மே 20-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,900 ஆகவும், பவுனுக்கு ரூ.55,200 எகிறியது. அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

ஜூன் மாதம் தங்கம் விலை வெகுவாக குறைந்தது. ஜூலை மாதம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,905-யையும், பவுனுக்கு ரூ.55,240-யையும் தொட்டது. அதன் பின்னர், மீண்டும் இறங்குமுகத்தை கண்டு ஜூலை மாத கடைசியில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,420 ஆகவும், பவுனுக்கு ரூ.51,360 ஆகவும் குறைந்தது. இது கிட்டதட்ட ரூ.4,000 குறைவாகும்.

தங்கம்

தாண்டவில்லை

ஆகஸ்ட் மாதம் சற்று ஏறுமுகத்தில் தங்கம் விலை இருந்தாலும் பவுனுக்கு ரூ.53,750-ஐ தாண்டவில்லை. ஆனால், செப்டம்பர் மாதம் தங்கம் விலை தாறுமாறாக எகிறி கிராமுக்கு ரூ.7,100 வரையிலும், பவுனுக்கு ரூ.56,800 வரையிலும் சென்றது.

அக்டோபர் மாதம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,455 வரையும், பவுனுக்கு ரூ.59,640 வரையும் சென்றது. நவம்பர் மாதம் தங்கம் விலை பாதியிலேயே பவுனுக்கு ரூ.55,480 வரையும் சென்றது. டிசம்பர் மாதம் இதுவரை அதிகம் எகிறவும் இல்லாமல், அதிகம் குறையவும் இல்லாமல் கொஞ்சம் ஏறியும், கொஞ்சம் இறங்கியும் வருகிறது.

ஒரே நாளில் மூன்று முறை உயர்வு!

இந்த ஆண்டு மே மாதம் 10-ம் தேதி வந்த அட்சய திருதியை அன்று மட்டும் தங்கம் விலை மூன்று முறை உயர்ந்தது. அன்றைய காலை 6 மணி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,600-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.52,800-க்கும் விற்பனை ஆனது.

பிறகு, காலை 8.30 மணியளவில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.6,705-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.53,640-க்கும் விற்பனை ஆனது. பின்னர், மதியம் 3 மணி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,770-க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.54,160-க்கும் விற்பனை ஆனது.

தங்கம்

காரணம் என்ன?

தங்கம் விலை இந்த ஆண்டு மட்டும், கிட்டதட்ட பவுனுக்கு ரூ.12,000 வரை ஏறி, இறங்கியிருக்கிறது. இந்தத் தங்கம் விலை ஏற்றத்திற்கு உலக அளவில் நடந்த பல மாற்றங்களும், அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் தங்கம் பக்கம் மாற்றியதும் தான் முக்கிய காரணம். மேலும், உலக நாடுகளின் வங்கிகள் தங்கம் வாங்கி குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியது.

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தங்கம் விலை இனி அதிகம் குறைவதற்கு வாய்ப்பில்லை...கொஞ்சம் கொஞ்சமாக ஏறத் தான் போகிறது.

கடந்த ஆண்டு...

2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கிராம் ஒன்றுக்கு ரூ.5,130 ஆகவும், பவுன் ஒன்றுக்கு ரூ.41,040 ஆகவும் விற்பனை ஆனது. அதே ஆண்டு கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.5,910 ஆகவும், பவுனுக்கு ரூ.47,280 ஆகவும் விற்பனை ஆனது.

கடந்த ஆண்டு வரை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70-க்கு சற்று மேலும், கீழும் விற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.100-ஐ கூட தாண்டியது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Gold Rate Today: 'குறைந்த தங்கம் விலை..!' - எவ்வளவு தெரியுமா?!

நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10-உம், ஒரு பவுனுக்கு ரூ.80-ம் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10 குறைந்து ரூ.7,090 ஆக விற்பனையாகி வருகிறது.இன்று ஒரு பவுன் தங்... மேலும் பார்க்க

Gold Rate Today: தொடரும் ஒரே விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம்

அதே விலை...கடந்த சனிக்கிழமை விற்பனையான அதே தங்கம் மற்றும் வெள்ளி விலையே தான் இன்றும் தொடர்கிறது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,100-க்கு விற்பனை ஆகி வருகிறது.ஒரு பவுன் தங்கம்...... மேலும் பார்க்க

Gold Price: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது... இன்றைய தங்கம் விலை என்ன?

குறைவு...தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.7,040 ஆகும். ஒரு பவுன் தங்க... மேலும் பார்க்க

Gold Price: இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்தது..!

குறைவு...நேற்றைய தங்கத்தின் விலையை விட, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.520 ஆகவும் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை (... மேலும் பார்க்க

Gold Price: இன்று தங்கம் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?!

தங்கம் விலை குறைவு!தங்கம் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு பவுனுக்கு ரூ.120-ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கு... மேலும் பார்க்க

Gold Price: `இன்று தங்கம் விலை குறைவு!' - எவ்வளவு தெரியுமா?!

நேற்றை விட...நேற்றைய தங்கம் விலையை விட, இன்று ஒரு கிராம் தங்கம் 10 ரூபாயும், ஒரு பவுன் தங்கம் 80 ரூபாயும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,150-க்கு விற்பனை ஆகி வரு... மேலும் பார்க்க