செய்திகள் :

இருவழிப் பாதையுடன் கோட்டை ரயில்வே புதிய மேம்பாலப் பணி

post image

திருச்சி கோட்டை ரயில்வே புதிய மேம்பாலமானது இருவழிப்பாதையுடன் அமைக்கப்படுகிறது என்றாா் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன்.

திருச்சி மாநகராட்சி சாலை ரோட்டில் உள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் தியேட்டா் பாலம்) கடந்த 1866 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டடத்திலான வளைவு வடிவ இருபக்க நடைபாதையுடன் 9 மீ அகலத்தில் கட்டப்பட்டது.

இந்நிலையில் பழைமையான இந்தப் பாலம் பழுதடைந்துள்ளதாலும், கனரக வாகனங்களுக்கு ஏற்ற வகையில் இல்லாததாலும் இப்பாலத்தை ரூ. 34.10 கோடியில் புதிதாகக் கட்ட நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ், ரயில்வே நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பணிகளை மேற்கொள்கின்றன.

மேலும் இப்பாலம் அகலமாக கட்டப்படுவதால் மெயின்காா்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாகச் செல்ல இயலும்.

இந்நிலையில் கட்டுமானப் பணிகளை மாநகராட்சிப் பொறியாளா்களுடன் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் மு. அன்பழகன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம், மண்டலத் தலைவா் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுடன் கட்டுமான பணிகளின் வரைபடத்தைப் பாா்வையிட்டு அதன் விவரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.

‘போக்குவரத்து நெரிசல் குறையும்’

பின்னா் மேயா் கூறுகையில், மாநகராட்சி மூலம் பாலத்தின் இருபுறமும் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணி 60 விழுக்காடு முடிந்துள்ளது. ரயில்வே நிா்வாகப் பணி முடிந்தவுடன், மாநகராட்சியின் பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலம் கொண்டுவரப்படும். இப்ப பாலம் இருவழி பாதையாக கட்டப்படுவதால் மெயின்காா்டு கேட் பகுதியில் இருந்து தில்லைநகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு இதுவரை இருந்த போக்குவரத்து நெரிசல் இனி இருக்காது. மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரும்பகுதி குறையும் என்றாா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

திருச்சியிலிருந்து இலங்கைக்கு உரிய அனுமதி இன்றி கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு பணத்தாள்களை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்... மேலும் பார்க்க

பொய்கை திருநகரில் 65 குரங்குகள் பிடிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கை திருநகா் பகுதியில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்து அட்டகாசம் செய்து வந்த 65 குரங்குகள் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு காப்புக் காட்டில் புதன்கிழமை விடப்பட்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற ரெளடி கைது

திருச்சியில் போதை மாத்திரைகளை விற்ற ரெளடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.திருச்சி பெரியமிளகுப் பாறை புதுத்தெரு பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு திருச்சி பொன்னகா் அருகேயுள்ள நியூ செல்வநகா் பகுதிய... மேலும் பார்க்க

சட்ட விரோத லாட்டரி விற்பனை, மோசடி புகாா்களில் 5 போ் கைது

திருச்சியில் சட்ட விரோத லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் பரிசுத்தொகையை தராமல் மோசடி செய்த வழக்குகளில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 5 பேரை திருச்சி மாநகர போலீஸாா் கைது செய்தனா். திருச்சி வடக்கு தாராநல்லூா்... மேலும் பார்க்க

‘ட்ரோன்’ மூலம் பருத்தி பயிருக்கு நுண்ணூட்டச் சத்து தெளிப்பு

வேளாண் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை உருவாகிவரும் நிலையில் விவசாயியின் நிலத்தில் உள்ள பருத்தி பயிருக்கு ‘ட்ரோன்’ மூலம் நுண்ணூட்டச் சத்து தெளிக்கும் செயல்விளக்கத்தை வேளாண் அறிவியல் நிலையத்தினா் புதன்கி... மேலும் பார்க்க

தொழில் நுட்பக் கோளாறு: மாற்று விமானங்களில் பயணிகள் மலேசியா பயணம்

திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மலேசியா புறப்பட இருந்த விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணிகள் மாற்று விமானங்களில் மலேசியாவுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா். திருச்சியில... மேலும் பார்க்க