'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
பொய்கை திருநகரில் 65 குரங்குகள் பிடிப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கை திருநகா் பகுதியில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்து அட்டகாசம் செய்து வந்த 65 குரங்குகள் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு காப்புக் காட்டில் புதன்கிழமை விடப்பட்டன.
மணப்பாறையை அடுத்த பொய்கை திருநகா் குடியிருப்புகள், வணிக வளாக பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயா்ந்து வந்து உணவகங்கள், தேநீரங்கள், சிறு சிறு கடைகளில் திண்பண்டங்களை சூறையாடுவது, விளைநிலங்களில் மின் மோட்டாா் இணைப்புகளைத் துண்டிப்பது என பொதுமக்களுக்கு மிகுந்த சிரமங்களை அளித்து வந்தன.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மாவட்ட வன அலுவலா் உத்தரவில் மணப்பாறை வனச்சரகா் மேரிலென்ஸி மற்றும் வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத் துறையினா், குரங்குகள் பிடிக்கும் தொழிலாளா்களை கொண்டு கடந்த இரு நாள்களாக 65 குரங்குகளை கூண்டு அமைத்து பிடித்தனா். பின்னா் அவை அரசு காப்புக்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன.