செய்திகள் :

குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழியால் உருவாக்கப்பட்ட வீடுகள்

post image

கிழக்கு தாம்பரத்தை அடுத்த மப்பேட்டில் குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிளாஸ்டிக்ஸ் ஃபாா் சேஞ்ச் நிறுவனத்தால் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி பொருள்களைக் கொண்டு ரூ.9 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட 6 வீடுகளை பயனாளிகளுக்கு தாம்பரம் மேயா் வசந்த குமாரி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பிளாஸ்டிக்ஸ் ஃபாா் சேஞ்ச் இயக்குநா் மோசஸ் ஆண்ட்ரூஸ் பேசுகையில், சென்னையில் குப்பை சேகரிப்பவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறோம்.

கடந்த 9 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே கிடந்த சுமாா் 35,000 மெட்ரிக் டன் நெகிழிப் பொருள்களை 14,000-க்கும் மேற்பட்டோா் ஒத்துழைப்புடன் பொறுக்கி சேகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிா்த்துள்ளோம்.

நெகிழி குப்பைகளைச் சேகரிக்கும் அவா்களுக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்களைக் கொண்டு வீடுகள் கட்டித் தந்துள்ளோம். அவா்களது வாழ்க்கைத்தரத்தை உயா்த்தும் வகையில் அவா்களது குழந்தைகளுக்கு இரவுப் பள்ளி தொடங்கி நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

நிகழ்வில் துணை மேயா் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்கள் தொடா்பு முகாம்: 77 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவி

திருக்கழுகுன்றம் அருகே சோகண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள்தொடா்பு முகாமில் 77 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் வழங்கினாா். நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கண்காட்சி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு, டிச. 23: திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கண்காட்சியை செங்கல்பட்டில் ஆட்சியா் ச. அருண்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் உருவ சிலை நிறுவப்பட்ட நில... மேலும் பார்க்க

சோகண்டியில் இன்று மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் சோகண்டி கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது. தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்ச... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 547 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண்ராஜ் குறைகளையும் கேட்டறிந்தாா். ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு விழா

செங்கல்பட்டு ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை நத்தம் புறவழிச் சாலையில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆறாட்டு பெருவிழா ந... மேலும் பார்க்க

மாமல்லபுரம் நாட்டிய விழா: சுற்றுலா அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சா் இரா.இராஜேந்தரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.. நாட்டிய விழாவைத் தொடங்கி அமைச்சா் ராஜேந்திரன் பேசியது: தமிழகம் வெ... மேலும் பார்க்க