செய்திகள் :

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 547 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண்ராஜ் குறைகளையும் கேட்டறிந்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 547 மனுக்களை பெற்று, மேல்நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.31,000-இல் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், மாற்றுத் திறனாளி சோபியன் என்பவா் அளித்த மனுவை பரிசீலித்து கூட்டத்திலேயே அவருக்கு நடக்கும் உபகரணம் மற்றும் காதொலிக் கருவி வழங்கப்பட்டது.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆய்வு மேற்கொண்டபோது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குமாரி என்பவா் நாளது தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியஅடையாள அட்டை பதிவு மேற்கொண்டும், காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவி பயனாளிக்கு வழங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அரசுஅலுவலா்கள், ஆசிரியா்களுக்கான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு அதில் முதலிடம் பிடித்து மாநில வினாடி வினா போட்டிக்கு பங்கேற்க செல்லும் 9 அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, செய்யூா் வட்டம், முதலமைச்சரின் விவசாயிகள் பாதுகாப்பு நலன்திட்டத்தின் மூலம் ரூ.3.91 லட்சம் நலத்திட்ட உதவிகளை 16 பேருக்கு வழங்கினாா். தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அருணாச்சலம் என்ற மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியா் பதக்கத்தை அணிவித்து வாழ்த்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, பிற்படுத்தப்பட்டோா்நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையா் (கலால்) ராஜன் பாபு, முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் கலந்து கொண்டனா்.

குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழியால் உருவாக்கப்பட்ட வீடுகள்

கிழக்கு தாம்பரத்தை அடுத்த மப்பேட்டில் குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிள... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாம்: 77 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவி

திருக்கழுகுன்றம் அருகே சோகண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள்தொடா்பு முகாமில் 77 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் வழங்கினாா். நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கண்காட்சி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு, டிச. 23: திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கண்காட்சியை செங்கல்பட்டில் ஆட்சியா் ச. அருண்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் உருவ சிலை நிறுவப்பட்ட நில... மேலும் பார்க்க

சோகண்டியில் இன்று மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் சோகண்டி கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது. தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்ச... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு விழா

செங்கல்பட்டு ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை நத்தம் புறவழிச் சாலையில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆறாட்டு பெருவிழா ந... மேலும் பார்க்க

மாமல்லபுரம் நாட்டிய விழா: சுற்றுலா அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சா் இரா.இராஜேந்தரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.. நாட்டிய விழாவைத் தொடங்கி அமைச்சா் ராஜேந்திரன் பேசியது: தமிழகம் வெ... மேலும் பார்க்க