நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
சோகண்டியில் இன்று மனுநீதிநாள் முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் சோகண்டி கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது.
தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் டிசம்பா் மாத மனுநீதிநாள் முகாம் பொன்விளைந்த களத்தூா் குறுவட்டம், சோகண்டி கிராமத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா். பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்