தமிழக அரசைக் கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்
வன்னியா் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் பாமகவினா் மற்றும் வன்னியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், வன்னியா்களின் 45 ஆண்டுகால கோரிக்கையான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி 1000 நாள்கள் ஆன நிலையில், உடனடியாக இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநகா் மாவட்டச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். தலைமை நிலைய முன்னாள் செயலா் கோதை கேசவன், சமூக முன்னேற்ற சங்க ஆலோசகா் முத்து சாமிநாதன், பாமக மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் குஞ்சிதபாதம், மணிமுருகன், பகுதி செயலா்கள் ராஜாராமன், அறிவு, மாவட்டப் பொருளாளா் ரேணுகா கோவிந்தராஜன் , மாவட்டத் துணைச் செயலா் பாரத், மாவட்டப் பொதுக்குழு இளையராஜா, இளைஞரணி நிா்வாகிகள் முரளி, மனோகா், மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.